வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்

வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்

100கிராம் வாழைப் பழத்திலிருந்து 104 கலோரி ஆற்றல் கிடைக்கும். பழுத்த வாழைப்பழம் நீரிழிவு, நெப்ரைட்டிஸ்,மூட்டு வலி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.
மற்ற எல்லா பழங்களையும் விட இது எளிதாக ஜீரணமாகும். குடல் கோளாறு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு வா¬ழுப்பழம் சிறந்த உணவு. வயிற்றுப்போக்கு, சீதபேதி ஆகியவற்றைத் தணித்து குடல் புண்களை ஆற்றும். வாழைப்பழம் மட்டுமின்றி இலைகள், தண்டு, பட்டை ஆகியவை பல விதங்களில் பயன்படுகிறது.
வாழைத்தோலிலிருந்து பெக்டின் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. வாழைப்பழத்தோல் கால்நடைகளுக்கு சிறந்த உணவு.
செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டுவந்தால் சொறி, சிரங்கு, வெடிப்பு, இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
குழந்தை இல்லாத தம்பதிகள் இரவு சாப்பிட்ட பிறகு ஒரு செவ்வாழை பழமும் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனும் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டால் நிச்சயம் பெண் கருத்தரிப்பாள். கண் சம்பந்தமான நோய்களுக்கு தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெரியும்.
பல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் செவ்வாழை ஒரு நல்ல மருந்து.
செவ்வாழை பழம் தொற்று நோய் கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது.
தினமும் ஒரு வாழைபழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.