பூரி-உணவகத்தில் செய்யும் முறை

பூரி-உணவகத்தில் செய்யும் முறை..


 தேவையான பொருட்கள்:
========================

கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்
சீரக பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.

செய்முறை:
============

* கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.

* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.

* ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம்  வைக்கவும்.

* எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)

* எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.

* இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியை போல puff ஆக உதவும்.

* ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.

 * இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.

* சுவையான பூரி தயார்.