நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்

 நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்.


திருமணம்:

திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.


காதல்:

காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு.

காதல் திருமணம்:                                     
                                                        

காதல் திருமணங்கள் பெரும்பாலும் பெற்றோருக்கு தெரியாமல் உற்றார் உறவினர் இல்லாமல் காவல் நிலையங்களிலோ அல்லது ரிஜிஸ்தர் ஆபிஸ்களில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர்கள் அவர்கள் வேலை முடிந்து விட்டது என்று வீட்டிற்கு கிளம்பி விடுவர்.இதற்கு பிறகு தான் அந்த தம்பதியருக்கு வாழ்க்கைன்னா என்ன என்பது தெரிய ஆரம்பிக்கும்.பெரும்பாலும் அந்த ஜோடிகளை பெற்றோர்கள் வீட்டிற்குள் சேர்த்து கொள்ளமாட்டார்கள்.

இந்த ஜோடி சொந்தபந்தங்களை இழந்து அனாதை போல் தெருவில் நிற்கும்.70 சதவீத காதல் ஜோடி சில மாதங்களிலே பிரிந்து விடும்.காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறவங்க எல்லோரும் கண்ணியமா சந்தோசமா இருந்தா நமக்கும் முழு நம்பிக்கை வரும்.

காதல், கல்யாணம், குழந்தை குட்டி ஆனப்பிறகு டைவர்ஸ் கேட்டு கோர்ட் படிகள்ல ஏறி இறங்கிக்கிட்டு இருக்காங்க. இந்த திருமண வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்களே.

30 சதவீத காதலில் ஜெயித்த ஜோடி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.முதலில் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் அனுமதிப்பதில்லை,பிறகு அவர்களின் உடன் பிறந்தவர்களின் விஷேசங்களுக்கு கூட கலந்து கொள்ள அழைக்கப்படுவதில்லை.சில காதல் ஜோடி நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களின் திருமண ஆல்பங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுவதுண்டு தனக்கு இப்படி எல்லாம் நடக்கவில்லையே என்று.

பள்ளியில் சேர்க்கும்போது தன் குழந்தைக்கு எந்த ஜாதி போடுவது என்று இவர்களுக்குள் குழப்பம் ஏற்படுவதுண்டு.அடுத்து இந்த குழந்தை பெரியவளாகி திருமணம் செய்ய எந்த ஜாதியில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்ப்பது என்பதில் குழப்பம் ஆரம்பித்துவிடும்.பெரும்பாலும் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு எளிதில் வரன் அமைவதில்லை.

கலப்பு மணம் செய்து கொண்டவர் வீட்டில் ஒரு தங்கை இருந்தால் அந்த பெண்ணிற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் நடக்காது.ஓடிப்போனாளே அந்த பொன்னுடைய தங்கச்சி தானே இது இந்த இடம் வேணாம்பா என்று பலர் சொல்வதுண்டு.

ஒரு பெண் இன்னொருவருடன் ஓடிபோனாள் அந்த குடும்பமே தலை குணிந்து நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்:



இது திருமணம் அல்ல திருவிழா.அந்த அளவுக்கு திருமணம் கலை கட்டும்.எங்கும் மகிழ்ச்சியே நிலைத்து இருக்கும்.

தான் ஆசை ஆசையாக வளர்த்த மகளுக்கு பெற்றோர்கள் தேடி தேடி மாப்பிள்ளை பார்ப்பார்கள்.நம்ம மகளை கண் கலங்காம பார்த்துக்குவானா.போற இடத்தில் நம் மகள் நல்லா இருப்பாளா என்று பார்த்து பார்த்து மாப்பிள்ளை தேடுவார்கள்.

நல்ல இடம் கிடைத்துவிட்டால் தனது சொந்தங்களை எல்லாம் அழைத்து போய் காண்பித்து அவர்களும் மணப் பெண்ணும் சம்மதித்த பிறகு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பண்ணுவார்கள்.

பிறகு திருமணப் பத்திரிக்கை அடித்து ஊர் ஊராக சொந்த பந்தங்களை தேடி தேடி அழைப்பர்.மகளுக்கு தேவையான பொருள்கள்,நகைகள் அனைத்தையும் சந்தோஷமாக வாங்கி தருவர்.

திருமண நாள் அன்று அந்த இடமே சந்தோஷத்தில் திளைத்திருக்கும்.
காப்பு நூல் கட்டுதல்,மங்கல நீர் கொண்டு வருதல்,மண மக்கள் ஒப்பனை,மணமகன் அழைப்பு,வேள்வித் தீ,அம்மி மிதித்தல்,பாத பூசை செய்தல்,அருந்ததி காட்டல்,அறம் செய்தல்,மங்கல அணி, சீதனம் கொடுத்தல் இது போன்று பல்வேறு சம்பிரதாயங்களுடன் பல திருமணங்களும்,பெற்றவர்கள் தாலி எடுத்து கொடுத்துஉற்றார் உறவினர் வாழ்த்தும்படியான சீர் திருத்த கல்யாணங்களும் நடைபெறும்.

இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்த மணமக்களை உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து விருந்து கொடுப்பர்.

இந்த திருமணங்களிலும் 20 சதவீத மணமுறிவு ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கிறது.அதிலும் 10 சதவீத ஜோடிகளை பெரியவர்கள் ஒன்று கூடி பேசி சேர்த்து வைப்பர்.

இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்துவது,பெண் பெரிய மனுஷியானாள் உறவுகள் ஒன்று கூடி விழா எடுப்பதௌ என்று அவர்கள் கடைசி வரை பெற்றவர்களும் உறவினர்களும் உடன் இருப்பர்.

பள்ளி பருவத்தில் ஏற்படும் காதல் வெறும் இனக்கவர்ச்சி.18 வயதுவரை உங்களுக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து
செய்த பெற்றொருக்கு தெரியும் உங்களுக்கு யாரை மணம் முடித்த வைக்க என்று.

காதல் செய்யுங்கள்...சிறிய வயதில் பெற்றோர்கள் மீதும் கல்வி மீதும்...காதல் செய்யுங்கள் திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியையும் நீங்கள் செய்யும் உங்கள் தொழிலையும்...காதல் செய்யுங்கள்...உங்கள் குழந்தையையும்,உங்கள் வயதான பெற்றோரையும்...காதல் வாழ்க...

இப்போது சொல்லுங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்லதா அல்லது ஓடி போய் செய்து கொள்ளும் காதல் திருமணம் நல்லதா...