ஆயுர்வேத சிகிச்சை முறையில் தலை முடி உதிர்வை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

ஆயுர்வேத சிகிச்சை முறையில் தலை முடி உதிர்வை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்


ஆரோக்­கி­யத்­துக்கும் ஒரு­படி மேலாக அழ­குக்கு அக்­கறை செலுத்தும் காலம் இது. அந்த வகையில் ஆண், பெண் இரு­பாலா­ருக்­குமே தலை­முடி உதிர்வு பிரச்­சி­னை­யாக உள்­ளது.

நம் உடம்பில் ஐந்து மில்­லியன் முடிகள் உள்­ளன. தலையில் மட்டும் எண்­ப­தா­யிரம் முதல் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் முடிகள் உள்­ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்­கிற மூலப்­பொ­ருள்தான் முடிகள் வளர்­வ­தற்குக் கார­ண­மாக இருக்­கி­றது. ஆயுர்­வேத வைத்­திய முறையில் தலை­மு­டி­யு­திர்வை எவ்­வாறு கட்­டுப்­ப­டுத்­தலாம்

 ஆயுர்­வேத மருத்­து­வத்தில் முடி உதிர்வுக்­கான சிகிச்சை ஏதும் உண்டா?

மன உளைச்சல் கார­ண­மா­கவும், மஞ்சள் காமாலை, மலே­ரியா, தைபோயிட் போன்ற நோய்­க­ளாலும், சிகரெட் பிடிப்­ப­தாலும், தலை­முடி உதிர முக்­கி­ய­மான கார­ண­ங்களாகும். சில வகை­யான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்­தி­ரை­களை எடுக்­கும்­போது தலை­முடி உதிர ஆரம்­பிக்கும். வெந்நீரில் குளிப்­ப­தாலும், தலைமுடிக்கு சாயம் பூசுவ­தாலும் முடிகள் உதி­ரலாம்.
மேலும் மனித உடலில் சூடு அதிகம் காணப்­ப­டு­வது தலை­முடி உதிர்­வுக்கு பிர­தான கார­ணி­யாக அமைந்­துள்­ளது. மனித உடலில் வெப்பம் இரு வழி­களில் வெளி­யே­று­கின்­றது. உச்­சி ­த­லை­யூ­டா­கவும், கால் வெடிப்பின் ஊடா­கவும் வெளி­யா­கி­றது. இரத்தக் கொதிப்­பா­கவும் உஷ்ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இன்­றைய கால­கட்­டத்தில் ஆண், பெண்கள் இரு­பா­லாரும் மோட்டார் வாக­னத்தில் செல்­லும்­போது தலைக்­க­வ­சத்தை அணிந்து செல்­வதால் உச்­சந்­த­லையின் வெப்பம் வெளி­யேற்­று­வ­தற்கு தடை­யாக அமைந்­துள்­ளது. அத்­தோடு வேலைத்­த­ளங்­களில் (ஏ.சி.) பொருத்­தி­யி­ருப்­பதால் தொழில் புரியும் அனை­வ­ரி­னதும் தலை­மு­டியின் வெப்பம் வெளி­யேற்­றப்­ப­டாமல் குளிர்த்­தன்மை அதி­க­ரிப்­பதன் கார­ண­மாக இரத்த ஓட்டம் தடை ப­டு­கின்­றது. அத்­தோடு தலை­மு­டி­க­ளுக்கு இரத்தத்தினூடாக செல்­லு­கின்ற போசனை பதார்த்தம் குறை­வ­டை­வ­தாலும், பரம்­பரை ஒரு கார­ண­மாக அமைக்­கி­றது. அத்­தோடு உண­வு­களில் விஷ பதார்த்தம் அதிகம் காணப்­ப­டு­வ­தாலும் முடி­யு­திர்­வ­தற்கு கார­ண­மாக அமை­கி­றது.

 ஆயுர்­வேத சிகிச்சை முறை மூலம் இந்த பிரச்­சி­னைக்கு தீர்­வுண்டா?  
தலை­மு­டி­யு­திர்­வுக்கு மூல­காரணம் என்­ன­வென்று முதலில் அறியவேண்டும். அதன் பின்னர் தான் சிகிச்சை அளிக்­க­வேண்டும். அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு பொடு­குத்­தொல்லை ஒரு கார­ண­மாக அமைந்­துள்­ளது. இதனால் தலை­முடி உதிர்­கி­றது. பலர் எம்­மிடம் தலை முடி­யு­திர்­கி­றது என கூறிக்­கொண்டு வரு­கி­றார்கள். இவர்­களுக்கு எடுத்த எடுப்பில் தலை­மு­டிக்­கான எண்ணெய் வழங்க முடி­யாது. ஆனால் சில­ருக்கு ஆயுர்­வேத எண்ணெய் பாவிப்­பதன் மூலம் சரி­யா­கி­வி­டும். பல­ருக்கு இது சாத்­தி­ய­மா­காது. சளிக்­கா­ர­ண­மா­கவும், பொடுகுத் ­தொல்லைக் கார­ண­மா­கவும் முடி உதிர்­கி­றது. இதை முதலில் குணப்­ப­டுத்­தி­விட்டு அதன் பிறகு தலை­முடி உதிர்­வுக்­கான சிகிச்­சை­மு­றையை கையா­ள­வேண்டும். தலை­மு­டிக்கு ஒழுங்­காக எண்ணெய் சிகிச்சை வழங்­க­வேண்டும். குளிப்­ப­தற்­கான ஒழுக்க முறை­களை கடை­பி­டிக்­க­வேண்டும்

 தலை­மு­டிக்கு எண்ணெய் வைப்­ப­தற்­கான முறை­ உள்ளதா?  
தலை­மு­டிக்கு எண்ணெய் வைப்­ப­தற்கு என ஒரு முறை­யுள்ளது. தலை­மு­டிக்கு எண்ணெய் வைக்கும் போது தலையை அழுத்தி தேய்க்­கக்­கூ­டாது. அதா­வது முடி உதிரும் அள­வுக்கு அழுத்தி தேய்க்க கூடாது. மிகவும் மெது­வாக சரு­மத்­துக்கு படும்­படி எண்ணெய் வைக்­க­வேண்­டும் அத்­தோடு மிகவும் மெது­வாக மசாஜ் செய்­ய­வேண்டும். முடிக்கு வைக்­காமல் தலையின் சரு­மத்­துக்கு படும்­படி வைக்­க­வேண்டும். அப்­போது தான் முடி­வ­ளர்­வ­தற்கு தேவை­யான போசனை கிடைக்கும். இதன் மூலம் நாளுக்கு நாள் நல்ல பயனை பெறலாம்.

நாளாந்தம் தலை குளிப்­பதால் தலை முடிக்கு ஏதா­வது பாதிப்­புண்டா?
ஒவ்­வொரு நாளும் நீரா­டு­வதால் தலை­மு­டி­யு­திர்­வுக்கு காரணம் என்று சொல்ல முடி­யாது. ஆனால் நீரா­டு­வ­தற்­கான ஒரு குறிப்­பிட்­ட­கால வரை­யறை உள்­ளது. பொது­வாக விடியற்காலை­யி­லி­ருந்து 12 மணிக்குள் நீரா­டினால் எந்தப் பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது. மாலை நேரத்தில் நீரா­டு­வதால் சளி, பீனிசம் போன்ற நோய்கள் ஏற்­பட்டு முடி­ உ­திர்­வுக்கு கார­ண­மாக அமை­கின்­றது. எனவே ஒவ்­வொரு நாளும் நீரா­டு­வதால் முடி உதிர்­வ­தற்கு வாய்ப்­பில்லை..

 ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் முடி­யு­திர்­வ­தற்கு வித்­தி­யாசம் உள்­ளதா?

பெண்­களைப் பொறுத்­த­வ­ரை­யில் பெண்­களின் உடம்பில் ஏற்­படும் ஹோர்மோன் மாற்­றங்­க­ளால்தான் தலை­முடி உதிர்­வ­தற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. பெண்கள் பூப்­ப­டைந்­த­வுடன் அதா­வது 12 முதல் 14 வய­துக்குள் நிறைய தலை­மு­டியை இழக்க நேரி­டலாம், பொது­வாக பெண்­க­ளுக்கு 45–50 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் மாத­விடாய் நிற்­கி­ற­போது ஹோர்மோன் மாற்­றத்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்­ப­டுதல், முடி ­உ­திர்­தல் போன்ற கார­ணி­க­ளுக்கு வாய்­ப்புள்­ளது. கர்ப்­பிணி பெண்­க­ளுக்கு விற்­றமின், கனிப்­பொருள் தேவைப்­ப­டு­வதால் முடி உதிர்­வுக் ­கா­ர­ண­மாக அமை­கி­றது. பிர­சவம் முடிந்த சில மாதங்­க­ளுக்குள் முடி­யு­தி­ரலாம். சில பெண்­க­ளுக்கு தைரோ­யிட்டு சம்­பந்­த­மான பிரச்­சினை, ஊட்­டச்­சத்து குறை­வாக இருக்­கும்­போதும் முடி உதிர்­கி­றது. உதா­ர­ண­மாக நம் இரத்­தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். கர்ப்­பத்­தடை மாத்­தி­ரை­களை எடுப்­பதால் பெண்­க­ளுக்கு அதிக அளவில் முடி உதிர வாய்ப்­புள்­ளது. முடி உதிர்­வா­னது ஆண், பெண்கள் என வேறு­பாடு இல்லை. ஒவ்­வொ­ரு­வரின் உடலின் மாற்­றத்­திற்கு ஏற்ப முடி உதிர்வுக் கார­ண­மாக அமை­யலாம்.

 இளை­ஞர்கள் பல­ருக்கு முடி உதிர்ந்து வழுக்கை நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனை தடுப்­ப­தற்கு ஏதும் வழிகள் உள்­ள­னவா?
ஆம், வழுக்கை தலை பிரச்­சி­னையில் பெண்­களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இதற்கு முக்­கிய காரணம், ஆண்கள் பெண்­களை போல் தங்­களின் முடிக்கு போதிய பரா­ம­ரிப்­புக்­களை கொடுப்­ப­தில்லை இதில் எல்லா ஆண்­களையும் கூற முடி­யாது. ஒரு சிலரின் முறை­யான பரா­ம­ரிப்­பின்­மை­யினால் இளம் பரு­வத்­தி­லேயே முடி உதிர்தல் பிரச்­சி­னைக்கு உள்­ளாகி வழுக்கை விழு­கி­றது. ஆயுர்­வேத சிகிச்சை முறையில் இதற்­கான தீர்வுண்டு. இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்­கொள்­ள­வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு வாரம் அல்­லது ஒன்­றரை வாரங்­களில் முடி­யு­திர்வை கட்டுப்­ப­டுத்­தலாம். ஆனால் பெரும்­பா­லானோர் ஒரு மாதத்தில் குணப்­ப­டுத்­தி­வி­டலாம். என்று நினைக்­கி­றார்கள். ஆனால் அவ்­வாறு ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. ஆயுர்­வேத சிகிச்சை முறையில் அதி­க­மாக முடி­யு­திர்வு ஏற்­பட்டு தலை­ வழுக்கை உள்­ளவர் மிக கவ­னத்­துடன் சிகிச்சை பெற­வேண்டும் முதலில் தலை­கு­ளிப்­பதை ஒழுங்­காக கடைப்­பி­டிக்க வேண்டும்.

மேலும் தலை­மு­டிக்கு ஒரு கிர­ம­மான முறையில் எண்ணெய் பாவிக்க முதல் மூன்­று­மாதம் அடுத்து ஆறு­மாதம், ஒரு­வ­ரு­ட­காலம் என்ற படி­மு­றைக்கு அமை­வாக தலை­மு­டிக்கு எண்ணெய் வைத்து வந்தால் தலை­முடி உதிர்வை கட்­டு­ப் ப­டுத்த முடியும் இதே சமயம் வெவ்வேறு எண்­ணெய்­களை தலைக்கு உப­யோ­கிப்­பதால் முடிக்கு அதிக பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளது. தலை­சருமம் உலர்ந்து தலை­முடி உதிர்­வுக்கு கார­ண­மாக அமை­யலாம்.

ஒரு சில இளை­ஞர்­களின் தலையில் எவ்­வித முறையில் தலை­முடி உதிர்வு ஏற்­ப­டு­கின்­றது?
தலையின் முன்­ப­குதி, தலையின் பின் பகுதி, தலையின் மத்­திய பகுதி என பல­வி­த­மாக தலை­மு­டி­உ­திர்­கி­றது. சில­ருக்கு ஒரு ரூபா வடிவில் வட்டம் வட்­ட­மாக தலை­மயிர் உதிர்­கி­றது. இது ஒரு வைரஸ்­ கி­ரு­மியின் தாக்­க­மாக அமை­கி­றது. இவ்­வாறு உள்­ள­வர்கள் உட­ன­டி­யாக ஆயுர்­வே­த­ வைத்­தி­யரை நாடி சிகிச்சை பெற தவறும் பட்­சத்தில் முழு தலை­மு­டி­யையும் இழக்க நேரி­டலாம்.

amns-dental
உணவுப் பழக்கவழக்கங்களும் தலைமயிர் உதிர்வதற்கு ஒரு கார­ண­மாக அமை­ய­லாமா?
ஆம், ஆயுர்­வேத முறையில் நோக்கும் போது உணவு முறையில் அதிக கவனம் செலுத்­த­வேண்டும். உதா­ர­ண­மாக மாசி மீன், தக்­காளி, அச்­சாறு, வினா­கிரி உணவில் சேர்ப்­பதால் உஷ்ணம் அதி­கரிக்கும். உணவு விட­யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூடான உண­வு­களை உட்­கொள்ளக் கூடாது. எமது முடியைப் பாது­காக்க வேண்­டு­மானால் அதிக குளிர்ச்­சி­யா­னதும் அதிக போசனை உள்­ள­து­மான பொருட்­களை எடுக்க வேண்டும். தினமும் அதிக நீர் அருந்த வேண்டும். தினமும் ஏதா­வது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

 தலை­மயிர் உதிர்­வது பரம்­பரை நோயா?
அவ்­வாறு கூற­மு­டி­யாது. தாய், தந்­தைக்கு முடி உதிர்வு ஏற்­ப­டு­வதால் பிள்­ளை­க­ளுக்கு உதிர்வு ஏற்­ப­டாது. அதே­நே­ரத்தில் தாய், தந்­தை­ய­ருக்கு தலை­முடி உதி­ராமல் பிள்­ளை­க­ளுக்கு உதி­ர­லாம் சூழல் மாற்றம், சரும ­வ­றட்­சி­ய­டை­வ­தாலும், பொடுக்குத் தொல்­லை­யாலும் சில­வேளை 50 சத வீதத்­தி­ன­ருக்கு பரம்­பரை நோயா­கவும் இருக்­கலாம்.

இளம் நரையைத் தடுப்­ப­தற்­காக ஆயுர்வேத முறையில் சிகிச்சை உண்டா?
வய­தா­ன­வர்­க­ளுக்கு கறுத்த முடி வெளுப்­ப­டை­வது இயல்­பான ஒன்று. ஆனால் இன்று 20 வய­தான இளை­ஞர்­க­ளுக்கு தலை­மு­டி­யா­னது வெளுத்து முது­மை­யான தோற்­றத்தைத் தரு­கி­றது. அதற்கு காரணம் சத்­தான உணவு இல்­லாமை, முறை­யான முடி பரா­ம­ரிப்­பின்மை மற்றும் மனக் கவலை மேலும் உடலில் ஏற்­படும் நாட்­பட்ட நோய்­க­ளாலும் இள நரை ஏற்­ப­டு­கி­றது. அதிலும் குறிப்­பாக மூக்­க­டைப்பு, நீண்ட நாள் மலச்­சிக்கல் போன்றவையாலும் அதிக சிறு­வர்­களுக்கு முடி வெள்ளை நிற­மாற்­றத்­து­க்கு மண்டைச் சளி ஒரு கார­ண­மாக அமை­கி­றது. சளியை ஆரம்ப காலத்­திலே கவ­னித்து சிகிச்சை பெற­வேண்டும். இன்­றைய நவீன காலத்தில் பல வகை­யான ஜெல் வகைகள் சந்­தைக்கு வந்­துள்­ள­ கா­ர­ணத்தினால் சிறு­வர்கள், இளை­ஞர்கள் அனை­வரும் இவற்றை உப­யோ­கித்து நன்றாக தலையை நீரினால் சுத்தம் செய்­யாமல் விடுதல் போன்ற கார­ணங்­க­ளினால் முடி நிற­மா­றலாம். ஜெல் பாவித்­து­விட்டு ஆகக் குறைந்­தது 12 மணித்­தி­யாலம் அல்­லது 24 மணித்­தி­யா­லத்தில் நன்­றாக நீரினால் அலச வேண்டும். இல்­லா­விட்டால் நிற­மாற்றம் ஏற்­ப­ட­ வாய்ப்­புள்­ளது. அத்­தோடு இரண்டு மூன்று சிறு சிறு துளைகள் மண்டை யோட்டில் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

இன்­றைய நவீன காலத்­திற்கு ஏற்ற­வாறு அழகு நிலை­யத்திற்கு சென்று முடிக்கு நிறமாற்றம் செய்­வதால் ஏதா­வது பிரச்­சினை ஏற்படுமா?
ஆம். அழகு நிலை­யத்­துக்கு சென்று முடி­களை நிற­மாற்­றுதல் மற்றும் அயனிங் செய்தல் இவற்றால் முடி பாதிப்­புற அதிக வாய்ப்­புகள் உண்டு. காரணம் இங்கு அதி­க­ளவில் இர­சா­யன பொருள் சேர்ப்­பதால் நீண்ட காலத்­துக்கு பிறகு முடிக்கு பாதிப்பு ஏற்­ப­டலாம். சிலர் ஷெம்­போவை பாவித்­து­விட்டு இதற்கு ஏற்ற கண்­டிசன் பாவிப்­ப­தில்லை. இதனால் இயற்­கை­யான போச­னை பொ­ருட்கள் இழக்­கப்­ப­டு­கின்­றன. முடிஉடைதல், செம்­பட்­டை­யா­குதல், அடர்த்­தி­ கு­றைதல், முடி­வெ­டித்தல், முடியின் தோற்­றத்தில் மாற்­றங்கள் ஏற்­பட வாய்ப்­புகள் உண்டு. இதற்கு சவர்க்­கா­ரத்தை பாவிப்­பதே நல்­லது.

பொது­வாக பாட­சாலை செல்லும் குழந்­தை­க­ளுக்கு தலை­மு­டியில் பேன்கள் தோன்றி சிர­மத்தைக் கொடுக்கும். இந்த பேன்­களை முற்றிலும் அழிப்ப­தற்­கான ஆயுர்­வேத மருத்துவ முறையில் சிகிச்சை உண்டா?
நம்மில் சிலர் தலை­மு­டியை சரி­யாக சுத்தம் செய்­வ­தில்லை. அதா­வது ஒழுங்­காக நீரா­டு­வ­தில்லை. இதனால் பொடுகு, தலை­யி­லுள்ள அசுத்தம் கார­ண­மாக பேன் உற்­பத்­தி­யா­கி­றது. அத்­தோடு ஏனைய மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து பர­வு­கின்­றது. இதற்கு ஆயுர்­வேத முறையில் சிகிச்சை அளித்து இதை முற்­றாகக் குணப்­ப­டுத்­தலாம். உழுந்தை அவித்து ஓரிரு வாரங்­க­ளுக்கு தலைக்கு வைத்து நீரா­டி­ வந்தால் கட்­டுப்­ப­டுத்­தலாம்.


இன்று நாம் பார்த்­தோ­மே­யானால், எல்­லோரும் அவ­சர உல­கத்­தி­லுள்­ளோம் இதன் கார­ண­மாக பெரும்­பா­லானோர் சரி­யான முறையில் குளிப்­ப­தில்லை. உதா­ர­ண­மாக ஜெல் வகைகள் பாவித்து விட்டு தலை­மு­டியை 12 மணித்­தி­யா­ல­த்­துக்குள் அல்­லது 24 மணித்­தி­யா­லத்தில் ஒழுங்­காக தலை­மு­டியை சுத்தம் செய்­யா­விட்டால் முடி உதிர்­வுக்கு ஒரு கார­ண­மாக அமை­யலாம். அத்­தோடு இள நரை­ ஏற்­பட வாய்ப்­புள்­ளது. தலை­முடி ஏதோ வளர்த்தோம் என்று அதை பெரும்­பா­லானோர் கருத்தில் கொள்­வ­தில்லை. உணவு பழக்கம் மிக முக்­கி­ய­மா­னது. கடைக்கு சென்று சுவை என்­ப­தற்­காக உண்­பதால் அது எமது உடலின் ஆரோக்­கி­யத்தை பாதிக்­கி­றது என்­பதை சிலர் கருத்தில் கொள்­வ­தில்லை. உட­லுக்கு அதிக சூட்டை ஏற்­ப­டுத்தக் கூடிய உண­வு­களை தொடர்ந்து உண்­பதால் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். தலை­முடி உதிர்வு மாத்­தி­ர­மல்­லாமல் சிறு­நீ­ரக பாதிப்பு, கொழுப்பு போன்ற நோய்­க­ளுக்கு மூலக்­கா­ர­ண­மாக அமை­கி­றது. இதற்­காக நான் உணவை உண்­ண­வேண்டாம் என்று சொல்­ல­வில்லை. உங்­களின் உடலின் தன்­மைக்கு ஏற்ப எடுத்தால் ஏற்­பு­டை­ய­தாக இருக்கும்.

பால், யோகட், அதிக கீரை­வகைகள் உதாரண­மாக வல்­லாரை, பொன்னாங் கண்ணி போன்­ற­வற்றை உண்­பதால் அதிக போசாக்கை பெற முடியும். அதி­க­மானோர் தலை­மு­டிக்கு எண்ணெய் பாவிப்­பது குறை­வாக காணப்­ப­டு­கின்­றது. கட்­டாயம் தலை­மு­டிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்­ய­வேண்­டும். தலை­யின் சருமத்­திற்கு படும்­ப­டி­யாக எண்ணெய் தேய்க்­க­வேண்டும். அப்­போது தான் தலை­ம­யிரின் ஊடாக சரு­மத்­திற்கு எண்ணெய் சென்று போச­னை அதி­க­ரிக்கும். வாரத்தில் மூன்று அல்­லது நான்கு நாட்­களுக்கு எண்ணெய் தேய்க்க­வேண்டும். வேலை­விட்டு வந்து மாலை­ நே­ரத்தில் நீரா­டி­விட்டு தலை­மு­டிக்கு எண்ணெய் வைப்­பதால் எந்த ஒரு பயனும் கிடை­யாது. இவ்­வாறு தலை­முடிக்கு எண்ணெய் வைப்­பதை விட வைக்­காமல் விடு­வது சி­றந்­தது. காரணம் இள­நரை ஏற்­ப­டு­வ­தற்கு இது ஒரு கார­ண­மாக அமையும். காலையில் நீராட வேண்­டும். தலை­முடி நன்­றாக உலர்ந்த பின் தலை­மு­டிக்கு எண்ணெய் வைக்க வேண்­டும். ஆயுர்­வேத எண்ணெய் என்று அவ­சி­ய­மில்லை. நல்ல சுத்­த­மான தேங்­கா­யெண்ணெயை காலையில் தான் வைக்­க­வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்றரை அரை லீற்றருக்கு குறை­யாமல் தண்ணீர் அருந்­த­வேண்டும்.